search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜி.கே.வாசன் யார் தூண்டிலில் சிக்க போகிறார்
    X

    ஜி.கே.வாசன் யார் தூண்டிலில் சிக்க போகிறார்

    • அரசியலில் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்பது ஒன்று.
    • தேர்தல் காலங்களில், எப்போதுமே கூட்டணி கட்சி தலைவர்களிடம் இவர் டிமாண்ட் செய்ததே கிடையாது.

    அரசியலில் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்பது ஒன்று. இன்னொன்று மக்கள் ஒவ்வொரு கட்சியையும், அதன் தலைவர்களையும் பற்றி போடும் கணக்கு வேறு. அதே நேரம் அரசியல் கட்சிகள் போடும் கணக்கு வேறாக இருக்கும். த.மா.கா. அரசியலில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பெறாவிட்டாலும் அந்த கட்சிக்கு இந்த தேர்தலில் டிமாண்ட் அதிகரித்து இருப்பது ஆச்சரியமாக உள்ளது.

    தேசிய கட்சியான பா.ஜனதா, ஜி.கே.வாசன் தங்கள் பக்கம் வந்துவிட வேண்டும் என்று விரும்புகிறது. முதல்முறையாக காங்கிரசும் ஜி.கே.வாசன் தங்கள் பக்கம் வர வேண்டும் என்ற அழைப்பை விடுத்து உள்ளது. இப்படி 2 தேசிய கட்சிகளும் வாசனுக்கு தூண்டில் போடுவது ஏன்? என்பது சாதாரண மக்களுக்கு புரியாமல் இருக்கலாம். தலைவர் ஜி.கே. வாசனை பொறுத்தவரை, மிகவும் மென்மையானவர்.. நல்ல மனிதர்.. பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்... யாரையும் அநாகரீகமாக பேசாதவர்.

    தேர்தல் காலங்களில், எப்போதுமே கூட்டணி கட்சி தலைவர்களிடம் இவர் டிமாண்ட் செய்ததே கிடையாது.. கூட்டணி தலைமைக்கு எந்தவிதமான நெருக்கடியும் தர மாட்டார். அதனாலேயே தனிப்பட்ட மரியாதை எல்லா கட்சியினரிடமும் இவருக்கு இன்றுவரை நீடித்து வருகிறது

    ஒருமுறை, பிரதமரை வழியனுப்ப ஜி.கே. வாசன் சென்னை ஏர்போர்ட் வந்தபோது மோடியால் பெரிதும் கவனிக்கப்பட்டார்.அங்கிருந்த எல்லோரையும் விட்டு விட்டு, வாசனிடம் மட்டும் தனிப்பட்ட பாசத்தைக் காட்டினார் மோடி. பா.ஜ.க.வினரே இதை அப்போது எதிர்பார்க்கவில்லை.. அப்போது முதல் இன்று வரை பா.ஜ.க.வின் மேலிட அன்புக்கு பாத்திரமாகவே வாசன் திகழ்ந்து வருகிறார்.

    "அமைச்சராக்குகிறோம் பா.ஜ.க.வில் இணைந்துவிடுங்கள்" என்று பா.ஜ.க. மேலிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டும், வாசன் அதற்கு செவி சாய்க்க வில்லை.. சில மாதத்துக்கு முன்பு இதே கோரிக்கையை பா.ஜ.க. முன்வைத்த போதுகூட, தன்னுடைய கட்சியினரிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்று வாசன் சொன்னாரே தவிர, இப்போதுவரை பா.ஜ.க.வுக்கு பச்சைக்கொடி காட்டவில்லை.

    ஆனாலும், 4 நாட்களுக்கு முன்பு டெல்லி தலைவர்களை சந்தித்து பேசியபோது, 'கட்சியை கலைத்துவிட்டு கூண்டோடு பா.ஜ.க.வுக்கு வந்துவிடுங்கள்.. கட்சிக்குள் வந்துவிட்டால் மக்களவைத் தேர்தல் முடிந்ததும் உங்களை மத்திய அமைச்சராக்குகிறோம். என்று உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாசன் எதற்கும் பிடி கொடுக்காமல் நழுவி கொண்டிருக்கிறார். வாசனை மத்திய மந்திரியாக்கினால் காங்கிரசில் பலர் வாசனுடன் தொடர்பை ஏற்படுத்துவார்கள். இதன் மூலம் காங்கிரசை மேலும் பலவீனப்படுத்த முடியும் என்பது பா.ஜனதாவின் திட்டமாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் வாசன் தெளிவாக இருக்கிறார். கட்சியை கலைத்து விட்டு பா.ஜனதா பக்கம் போனால் சித்தாந்தம் மாறுவதால் தன்னோடு இருக்கும் கட்சியினர் காங்கிரஸ் பக்கம் சென்று விடுவார்கள் என்பது அவரது கணக்கு. தூண்டிலில் சிக்குவாரா? நழுவுவாரா?

    Next Story
    ×