search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சபாஷ்... இப்படித்தான் இருக்கணும் அரசியல்வாதி
    X

    சபாஷ்... இப்படித்தான் இருக்கணும் அரசியல்வாதி

    • தன் மீது புகார் கூறியிருக்கும் மணீசை மிகச்சிறந்த அதிகாரி என்கிறார் பேடி.
    • பொதுவாக சாதியை மையமாக வைத்து ஒரு பிரச்சினையை கிளப்பினால் உடனே அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டும்.

    தமிழக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தற்போது மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக இருக்கிறார். இவர் கன்னியாகுமரி, கடலூர் மாவட்ட கலெக்டர், சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் அரசு செயலர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்து நேர்மையான அதிகாரி என்று அனைத்து தரப்பிலும் மதிக்கப்படுபவர்.

    சென்னை மாநகராட்சி கமிஷனராக பணியாற்றிய போது தன்னை தலித் என்று இழிவு படுத்தினார் என்று இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மணீஷ் குற்றம் சாட்டி இருக்கிறார். மணீஷ் தற்போது ஈரோடு கூடுதல் கலெக்டராக பணியாற்றுகிறார். சென்னை மாநகராட்சியில் நடந்ததாக ஈரோட்டுக்கு சென்ற பிறகு மணீஷ் புகார் கூறி இருப்பது ஏன் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தன் மீது புகார் கூறியிருக்கும் மணீசை மிகச்சிறந்த அதிகாரி என்கிறார் பேடி.

    பொதுவாக சாதியை மையமாக வைத்து ஒரு பிரச்சினையை கிளப்பினால் உடனே அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டும். ஆனால் இந்த விவகாரத்தில் ரவிக்குமார் எம்.பி. பேடியின் நேர்மையை பாராட்டி இருக்கிறார். அவர் கடலூரில் கலெக்டராக இருக்கும் போதே அவரை நான் அறிவேன். மிகவும் நேர்மையான அதிகாரி. சாதி, மதம் எல்லாம் பார்க்க மாட்டார். நல்ல நிர்வாகி. அவர் மீது இவ்வாறு புகார் கூறுவது நம்பும்படியாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

    என்ன ஏது என்று விசாரிக்காமலேயே குரல் கொடுத்து வரும் அரசியல்வாதிகள் மத்தியில் அதிகாரியின் நேர்மைக்கு துணை நிற்பது பாராட்டுக்குரியது. இப்படித்தான் இருக்கணும் அரசியல்வாதி.

    Next Story
    ×