search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வியாசர்பாடியில் உலககால்பந்து இறுதிப் போட்டியை டிஜிட்டல் திரையில் பார்க்க ஏற்பாடு
    X

    வியாசர்பாடியில் உலககால்பந்து இறுதிப் போட்டியை டிஜிட்டல் திரையில் பார்க்க ஏற்பாடு

    • வட சென்னையின் சிறப்பு கால்பந்து விளையாட்டாகும்.
    • வட சென்னையில் மட்டும் கால்பந்தை விரட்டி சென்று உதைத்து கொண்டு இருப்பார்கள்.

    சென்னை:

    வட சென்னையின் சிறப்பு கால்பந்து விளையாட்டாகும். நகரின் பல பகுதிகளில் கிரிக்கெட் பேட்களையும், பந்துகளையும் கையில் சுழற்றி கொண்டிருக்கும் போது வட சென்னையில் மட்டும் கால்பந்தை விரட்டி சென்று உதைத்து கொண்டு இருப்பார்கள்.

    சென்னை மாநகரின் பிற பகுதிகளில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து டோனி, வீராட் கோலி, ரோகித் சர்மா என பேசி கொண்டிருக்கும் போது, வட சென்னையில் மரடோனா, மெஸ்சி, ரொனால்டோ பற்றி தான் பேசி கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு வட சென்னையில் கால்பந்து பிரபலமானது.

    வட சென்னையில் குறிப்பாக வியாசர்பாடி முல்லை நகர், பக்தவச்சலம் காலனி, கொடுங்கையூர் கண்ணதாசன் நகர், கன்னிகாபுரம், புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் உள்ள திடல்கள் கால்பந்துக்கு புகழ் பெற்ற மைதானங்களாகும். இங்கு பயிற்சி பெற்ற பலர் பல்வேறு அரசு துறையில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

    கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியதில் இருந்து சென்னையில் அதிக கால்பந்து ரசிகர்களை கொண்டுள்ள வட சென்னை விழாக் கோலம் பூண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் நடந்த லீக், கால் இறுதி மற்றும் அரை இறுதி ஆட்டங்களை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

    இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் உலக கோப்பை இறுதி போட்டி யில் அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை டிஜிட்டல் திரையில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வியாசர்பாடியில் சிறுவர்களுக்கு பல ஆண்டுகளாக கால்பந்து பயிற்சி அளித்து வரும் குடிசை பகுதி குழந்தைகள் விளையாட்டு மற்றும் கல்வி மேம்பாட்டு மைய தலைவர் தங்கராஜ் இது தொடர்பாக கூறியதாவது:-

    கடந்த 2006-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு உலக கோப்பை இறுதிப் போட்டியையும் வியாசர்பாடி முல்லைநகர் பஸ் நிலையம் அருகில் உள்ள திடலில் நேரடி ஒளிபரப்பு செய்து வருவோம்.

    5-வது முறையாக இன்னும் அகண்ட டிஜிட்டல் திரையில் ஒளிபரப்ப இருக்கிறோம். மேலும் வியாசர்பாடி மேக்சின்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்ப ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×