என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காய்கறி வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் ரத்து செய்யவேண்டும்- கொளத்தூர் த.ரவி அறிக்கை
- தமிழ்நாட்டில் டெண்டர் முடிந்த சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
- சுங்கச்சாவடி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.
தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி விடுத்து உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் டெண்டர் முடிந்த சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். சுங்கச்சாவடி பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். சில சுங்கச்சாவடிகளில் சரக்கு வாகனங்கள் பல மணி நேரம் காத்து கிடக்கும் நிலை உள்ளது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
காய்கறி, பழம், மலர், முட்டை உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு சுங்க கட்டணத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வரவேண்டும். சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டால் பொதுமக்களுக்கு காய்கறி, பழம், பூக்கள், முட்டை ஆகிய பொருட்களின் விலை தானாக குறைந்துவிடும்.
இவ்வாறு கொளத்தூர் த.ரவி கூறி உள்ளார்.
Next Story






