search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உடன்குடி பகுதியில் நெருஞ்சி முள் சேகரிப்பதில் பொதுமக்கள் ஆர்வம்
    X

    நெருஞ்சிமுள் சேகரிக்கும் ஒரு தம்பதி.


    உடன்குடி பகுதியில் நெருஞ்சி முள் சேகரிப்பதில் பொதுமக்கள் ஆர்வம்

    • ஒரு கிலோ ரூ. 150 வரை நெருஞ்சி முள்களை வியாபாரிகள் வீதி, வீதியாக வந்தோ அல்லது பழைய இரும்புகடைகளிலோ வாங்கி வருகின்றனர்.
    • நெருஞ்சியின் இலையில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது.

    உடன்குடி:

    நெருஞ்சி என்றஒரு காட்டுசெடி அற்புதமான மூலிகையாகும். தரையில் விரிந்துபடர்ந்து பூ பூத்து, காய் காய்த்து அப்படியே காய்ந்து விடும், இதுதான் நெருஞ்சிமுள், காலை காட்டு பகுதியில் செல்லும்போது காலில்குத்தி நம் கவனத்தை ஈர்க்கும்.

    இந்த சிறு கொடிகள் பல்வேறு மருத்துவகுணங்கள் கொண்டது. இது சிறு நெருஞ்சிமுள், செப்பு நெருஞ்சிமுள், பெருநெருஞ்சி முள் என 3 வகை உள்ளது.

    நெருஞ்சிமுள்ளில் உள்ள கொடி இலை, வேர், காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும் பயன் தரும் மருத்துவகுணம் படைத்ததாகும். சாலை ஓரங்களில் சாதாரணமாக முளைத்துக் கிடக்கும் இந்த நெருஞ்சி செடி பெண்களின் கருப்பையை சுத்தப்படுத்தவும், ஆண்மைக் குறைபாட்டை சரிசெய்யவும், ஆண்களுக்கு உண்டாகும் விதைப்பை வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

    சித்த மருத்துவத்தில் நெருஞ்சி விதைக்கு மிக முக்கிய இடமுண்டு. நெருஞ்சியின் இலையில் அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. அதோடு அதில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

    இவ்வாறான பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த நெருஞ்சிமுள் செடி உடன்குடி மற்றும் சுற்றுபுற காட்டுப்பகுதியில் அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக குக்கிராமங்களில் காலை, மாலை வேலைகளில் வெயில் தாக்கம் குறைவான பின் நெருஞ்சி செடிகளை அகற்றி முள்களை தனியாக பிரித்து எடுத்து வருகின்றனர்.

    சிலர் மொத்தமாக நெருஞ்சி செடியை மூட்டோடு அள்ளி தனியாக சோளவு மூலம் பிடைத்து எடுத்து தூசி, முள்களை தனியாக பிரித்தெடுத்து வருகின்றனர்.

    தற்போது ஒரு கிலோ ரூ. 150 வரை நெருஞ்சி முள்களை வியாபாரிகள் வீதி, வீதியாக வந்தோ அல்லது பழைய இரும்புகடைகளிலோ வாங்கி வருகின்றனர். அதனால் தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டு விட்டது. குடும்பத்துடன் சென்று நெருஞ்சிமுள் சேகரிக்கின்றனர்.

    சிலர் தனித்தனியாக சென்று சேகரிக்கின்றனர். இதுபற்றி வியாபாரி ஒருவரிடம் கேட்டபோது, நெருஞ்சி முள்ளுக்கு திடீரென கிராக்கி வந்து விட்டது. இப்படி ஒரு வருடமும் கிராக்கி வந்தது இல்லை. இனதவாங்கி தூத்துக்குடி.விருதுநகர், சென்னை போன்ற வெளியூருக்கு ஏற்றுமதி செய்வதாக கூறுகின்றனர்.

    Next Story
    ×