search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி
    X

    குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி

    • தென்காசி மாவட்டத்தில் குண்டாறு, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை பெய்தது.
    • அதிகபட்சமாக அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லிமீட்டரும், குண்டாறில் 4.2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    தென்காசி:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 வாரமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நேற்று மாலை திடீரென மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து வர தொடங்கியது. பாபநாசத்தில் 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தில் வழக்கம்போல் வெயில் அடித்தது. மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு இதமான காற்று வீசியது.

    மாநகர பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். டவுன் ஆர்ச் முதல் ஈரடுக்கு மேம்பாலம் வரையிலும், சந்திப்பு பஸ் நிலைய பகுதியிலும், பழைய பேட்டை முதல் தொண்டர் சன்னதி வரையிலும் சாலைகள் பல்லாங்குழியாக காட்சி அளிக்கிறது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணை பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக அடவிநயினார் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 10 மில்லிமீட்டரும், குண்டாறில் 4.2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டையில் லேசான சாரல் மழை பெய்தது. சிவகிரியில் 9 மில்லிமீட்டரும், செங்கோட்டையில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்ததால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று இரவு முழுவதும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

    பின்னர் மழை குறைந்ததால் இன்று காலை அருவிகளில் தண்ணீர் குறையத் தொடங்கியது. இதனால் இன்று காலை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×