என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பஸ்சில் திடீர் புகையால் பரபரப்பு
- தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாற்று ஓடை பகுதியில் வந்த போது பஸ்சில் இருந்து திடீரென புகை கிளம்பியது.
- பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர்.
தூத்துக்குடி:
மதுரையில் இருந்து ஒரு அரசு பஸ் இன்று அதிகாலை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு சென்றது.
தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாற்று ஓடை பகுதியில் வந்த போது பஸ்சில் இருந்து திடீரென புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் அதிகளவில் பரவி புகைமூட்டமாக மாறியது. இதனால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது. எனவே ஸ்பிக்நகர் நிறுத்தம் அருகே டிரைவர் பஸ்சை நிறுத்தினார்.
உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர். அப்போது பஸ்சின் பின்பக்கத்தில் இருந்து புகை வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே மாற்று பேருந்து வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து எதனால் புகை வந்தது என சோதனை செய்யப்பட்டு அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பஸ்சில் இருந்து திடீரென புகை வந்ததையொட்டி உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டதால் விபத்து அபாயம் தவிர்க்கப்பட்டது.






