என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூரில் நகராட்சி தெருவோரத்தில் குப்பைகளை கொட்டினால் ரூ.300 அபராதம்
- திருவள்ளூரை குப்பைகள் இல்லாத நகரமாக மாற்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- திருவள்ளூர் நகரத்தில் தெருவோரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர்:
திருவள்ளூரை குப்பைகள் இல்லாத நகரமாக மாற்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருவள்ளூர் நகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இதனை திருவள்ளூர் நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நிறைவடைந்தது. இதில் நகர மன்ற துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் கவுன்சிலர்கள் டி.கே.பாபு, இந்திரா பரசுராமன், பிரபு, மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் நிருபர் களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் நகரத்தில் தெருவோரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வீட்டில் உள்ள குப்பைகளை தெருவில் அல்லது பொது இடத்தில் கொட்டியது கண்டுபிடிக்கப்பட்டால் குப்பைகளை கொட்டியவருக்கு ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.
மேலும் குப்பை கொட்டுபவர்கள் குறித்து படம்பிடித்து அனுப்பினால் ரூ.300 சன்மானம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






