என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரத்தில் ரோந்து பணியின்போது பொதுமக்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய போலீஸ் சூப்பிரண்டு
- போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் காஞ்சிபுரம் பஸ்நிலைய பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார்.
- போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பொதுமக்களுடன் சேர்ந்து சாலையில் கேக் வெட்டி அனைவருடனும் புத்தாண்டு கொண்டாடினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தாண்டையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.
கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அத்துமீறும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் காஞ்சிபுரம் பஸ்நிலைய பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டார்.
புத்தாண்டு பிறந்ததையொட்டி அங்கு நின்றிருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் ஒருவருக்குகொருவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அவர்கள் ரோந்து பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு சுதாகருக்கும் வாழ்துக்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பொதுமக்களுடன் சேர்ந்து சாலையில் கேக் வெட்டி அனைவருடனும் புத்தாண்டு கொண்டாடினார். பின்னர் அவர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கேக், இனிப்புகள் வழங்கினார்.






