search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடசென்னை வளர்ச்சி திட்டத்துக்காக இளைஞர்களுக்கு திறன் பயிற்சி- அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
    X

    வடசென்னை வளர்ச்சி திட்டத்துக்காக இளைஞர்களுக்கு திறன் பயிற்சி- அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

    • வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கின்ற மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க ஓர் திட்டம்.
    • அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கக்கூடிய பாலிடெக்னிக், ஐ.டி.ஐ போன்ற படிப்புகள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

    சென்னை:

    சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைவரும் மற்றும் இந்து சமய அற நிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு இன்று நம்மாழ்வார்பேட்டை அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது தெரிவித்ததாவது:-

    சென்னை, நம்மாழ்வார்பேடை, அரசு தொழில்நுட்ப கல்லூரியில் "வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்" ஒரு பகுதியாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் வடசென்னை இளைஞர்களின் திறன் பயிற்சிக்காகவும் மற்றும் கூடுதல் வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் "திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்" அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கின்ற மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க ஓர் திட்டம். அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கக்கூடிய பாலிடெக்னிக், ஐ.டி.ஐ போன்ற படிப்புகள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாகும். இப்பாலிடெக்னிக் கல்லூரியில் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகள், அடிப்படை தேவைகள், மாணவர்கள் பயிலும் வகுப்பறைகளை மேம்படுத்துதல், அதற்குண்டான உபகரணங்கள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவைகள் குறித்து இன்றைக்கு துறை சார்ந்த செயலாளர் சி.சமயமூர்த்தி, உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, ஆணையாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் அதேபோல் ஐஏஎஸ் அதிகாரிகள் திவ்யா மாநகராட்சி ஆர்டிசி சென்ட்ரல் பிரவீன் அவர்களுடனும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தொழில் பயிற்சிக்காக திறன் மேம்பாட்டு சார்பில் தையல் பயிற்சியும், கணினி பயிற்சியும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இப்பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்குவதற்கு இக்கல்லூரி முதல்வர் உறுதியளித்திருக்கிறார்கள். வறுமைக் கோட்டிற்கு கீழே அதிகமாக மக்கள் வசிக்கின்ற பகுதி என்பதால் பயனுள்ள ஒரு செயலாக இந்த செயல் அமையும் என்பது நம்பிக்கையோடு இருக்கிறோம்.

    இந்த தொழில் பயிற்சிக்கு வருபவர்களுக்கு தொழில் பயிற்சி முடித்தவுடன் சான்றிதழும், தொழில் பயிற்சி வருகின்றவர்களுக்கு ஊக்கதொகையும் வழங்கப்பட இருக்கின்றது. அதுவே இது ஒரு அரிய வாய்ப்பாக பயன்படுத்தி இந்த பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவோடு இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கின்றன.

    மேலும் இந்த பாலிடெக்னிக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி தர முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. துறை சார்பில் தருகின்ற நிதியையும், அதேபோல் கூடுதலாக சி.எஸ்.ஆர். பணத்தையும் பெற்று இந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இருக்கிறோம். இந்த கட்டித்திலேயே இருக்கின்ற இந்த கேம்பஸ் 5.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் என்பதால் பயன்பாட்டில் இல்லாத இடத்தில் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற கட்டமைப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். இன்றைய ஆய்வின் தொடர்ச்சியாக இம்மாதம் நவம்பர் 13, 14, 15 ஆகிய மூன்று தேதிகளில் ஏதாவது ஒரு தேதியில் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

    Next Story
    ×