என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை அரசு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- சென்னையில் நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை.
- ஆசிரியர்களுக்கு நாளை பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதால் விடுமுறை அறிவிப்பு.
சென்னை:
சென்னையில் நாளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அரசு பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களுக்கு நாளைய தினம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி இருப்பதன் காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






