என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிதம்பரத்தில் பா.ஜனதா கூட்டத்தில் ரகளை-பரபரப்பு
    X

    சிதம்பரத்தில் பா.ஜனதா கூட்டத்தில் ரகளை-பரபரப்பு

    • பா.ஜ.க. மாவட்ட பிரச்சார அணித் தலைவர் பாரத் சிதம்பரம் நகர போலீசாரிடம் புகாரளித்தார்.
    • பா.ஜ.க. நிர்வாகியை, அதே கட்சியை சேர்ந்த மற்றொரு நிர்வாகியே தாக்கிய சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சிதம்பரம்:

    பா.ஜ.க.-வின் சிதம்பரம் நகர தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதிவியேற்பு விழா, சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் நேற்று நடந்தது.

    இதில் ஸ்ரீமுஷ்ணம் புடையூர் பகுதியைச் சேர்ந்த மாவட்ட பிரச்சார அணி தலைவர் பாரத் (வயது 28), சிதம்பரம் நகரப் பகுதியை சேர்ந்த மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன் (35) ஆகியோர் மாவட்ட நிர்வாகிகள் என்ற வகையில் கலந்து கொண்டனர்.

    இவ்விருவருக்கும் இடையே கட்சிப் பணிகளில் கடந்த காலங்களில் பல்வேறு கருத்து வேறுபாடும், முன்விரோதமும் இருந்து வந்தது. இதில் கோபிநாத் கணேசன் மீது பாரத் ஆன்லைனில் போலீசாருக்கு பல்வேறு புகார்களை அனுப்பியுள்ளார்.

    இந்நிலையில் சிதம்பரத்தில் நடந்த பதவியேற்பு விழாவிற்கு வந்த பாரத்தை மறித்த கோபிநாத் கணேசன், என்மீது புகார் அளித்து விட்டு, எனது ஊருக்கே வந்துள்ளாயா என்று கேள்விகேட்டு, விழா அரங்கத்திலேயே தகராறு செய்தார். மேலும், மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன் அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பாரத்தை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த பாரத் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து பா.ஜ.க. மாவட்ட பிரச்சார அணித் தலைவர் பாரத் சிதம்பரம் நகர போலீசாரிடம் புகாரளித்தார். அதன்படி பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன் மற்றும் பெயர் தெரியாத, அடையாளம் தெரிந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பா.ஜ.க. நிர்வாகியை, அதே கட்சியை சேர்ந்த மற்றொரு நிர்வாகியே தாக்கிய சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×