என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆரணி ஆற்றின் கரையில் 200 வீடுகளை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு
    X

    ஆரணி ஆற்றின் கரையில் 200 வீடுகளை அகற்ற பொது மக்கள் எதிர்ப்பு

    • பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் இன்று அப்பகுதி 200-க்கும் மேற்பட்டோர் வேலைக்கு செல்லாமல் கூடியிருந்தனர்.
    • கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே. கோவிந்தராஜன் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் சென்று ஆறுதல் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி நகராட்சியில் உள்ள 7 -வது வார்டுக்குட்பட்ட கள்ளுகடை மேடு பகுதியில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை பொதுப் பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் ஆரணி ஆற்றின் கரையை ஒட்டி உள்ளதாக நீதிமன்ற உத்தரவில் அளவீடு செய்து அகற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

    பொன்னேரி நகராட்சிக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து வரிகளையும் கட்டி வரும் நிலையில் திடீரென வீடுகளை அகற்ற கூறுவதாகவும் தங்களின் வாழ்வாதாரத்திற்கும் வசிப்பதற்கும் வேறு வழி இல்லை எனக் கூறி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தங்கள் வீடுகளை அகற்றக் கூடாது எனக்கூறி சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் இன்று அப்பகுதி 200-க்கும் மேற்பட்டோர் வேலைக்கு செல்லாமல் கூடியிருந்தனர். தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே. கோவிந்தராஜன் பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் சென்று ஆறுதல் கூறி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் அப்போது தி.மு.க. நகர செயலாளர் ரவிக்குமார் நகர மன்ற தலைவர் பரிமள விஸ்வநாதன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×