என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எழும்பூர் கோர்ட்டு வளாகத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை முயற்சி
    X

    எழும்பூர் கோர்ட்டு வளாகத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை முயற்சி

    • சங்கர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
    • எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை அயனாவரம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் சங்கர்.

    30 வயது வாலிபரான இவர் மீது திருட்டு வழக்குகள் உள்ளன. வழக்கு ஒன்றில் கைதாகி சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் கொளத்தூர் போலீசார் சங்கரை ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்து சிறையில் இருந்து அழைத்து வந்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தி வழக்கு விசாரணையை வேறு ஒரு தேதிக்கு தள்ளி வைத்தார்.

    இந்த நிலையில் சங்கர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார்.

    இதைத் தொடர்ந்து போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×