என் மலர்

  தமிழ்நாடு

  சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் விநாயகர் கோவில் அமைக்க அரசியல் கட்சியினர் எதிர்ப்பு
  X

  சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் விநாயகர் கோவில் அமைக்க அரசியல் கட்சியினர் எதிர்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவில் அமைக்க எதிர்ப்பு ஏற்ப்பட்டதால் வட்டார வளர்ச்சி ஊழியர்கள் சிலை அமைக்கும் பகுதியில் கற்களால் மூடி வைத்தனர்.
  • வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தில் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுப்படனர்.

  சூளகிரி:

  கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா சூளகிரி வட்டார வளர்சி அலுவலக வளாகத்தில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் 2016-2017 ஆண்டு நவீன முறையில் கட்டபட்டபோது கட்டிட கற்கள் மீதியானதை வைத்து விநாயகர் கோவில் கட்ட ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் அணைவரும் சேர்ந்து கூட்டு முயச்சியில் கட்ட முயச்சித்ததாக கூறப்படுகிறது.

  பின்பு கோவில் கட்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று விநாயகர் சிலை வைத்து திறக்க உள்ள நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் சிலர் வட்டார வளர்ச்சி அலுவலகம் பொது இடம் என்பதால், கோவில் வைக்க கூடாது, கடவுள் சிலை வைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து பி.டி.ஓ அலுவலக அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். விநாயகர் கோவில் கட்டியதில் தவறு இல்லை என பா.ஜ.க., பா.ம.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஆதரவு மனு அளித்தனர்.

  இதனால் அந்த பகுதியில் கோவில் அமைக்க எதிர்ப்பு ஏற்ப்பட்டதால் வட்டார வளர்ச்சி ஊழியர்கள் சிலை அமைக்கும் பகுதியில் கற்களால் மூடி வைத்தனர். இதை அறிந்த கோவிலுக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினர் மாலை 4 மணி அளவில் அந்த பகுதியை முற்றுகையிட்டனர். இதை அறிந்த சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, தாசில்தார் சக்திவேல், வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம அலுவலர் அகிலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தில் விரைந்து வந்து பேச்சு வார்த்தையில் ஈடுப்படனர்.

  இதுகுறித்து அனைத்து தரப்பினரையும் அழைத்து அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தாசில்தார், போலீசார் உறுதியளித்தனர். அந்த பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

  Next Story
  ×