search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திய கும்பல்
    X

    கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திய கும்பல்

    • புஷ்பாவதி வீட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று மொபைல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வார்.
    • பரிசோதனைக்கான கட்டணம் ரூ.30 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த வகுத்தானூர் கிராமத்தில் வசித்து வந்த சாக்கம்மாள் (எ) புஷ்பவதி, (வயது52) என்பவர் வீட்டில் சட்டத்திற்கு புறம்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் கருவி மூலம் சொல்வதாக மாவட்ட கலெக்டர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவர் உத்தரவின் பேரில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணைய இயக்குனரின் அறிவுறுத்தலின்படி அரூர் அரசு மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணா, குழுவினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த பெண்ணின் வீட்டில் சட்டத்திற்கு விரோதமாக ஈடுபட்ட சாக்கம்மாள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கவியரசன், (28) ஐயப்பன், (34) ஆகியோர் ஒரு பெண்ணிடம் 26,400 ரூபாய் வாங்கும் போது கையும் கழுவுமாக அதிகாரிகள் பிடித்தனர்.

    பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

    கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக வகுத்தானூர் கிராமத்தில் உள்ள சாக்கமாள் (எ) புஷ்பாவதி வீட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று மொபைல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வோம். அப்போது அதற்கான கட்டணம் ரூ.30 ஆயிரம் வரை வசூல் செய்வோம்.

    கருவில் இருப்பது பெண் குழந்தை என்றால் கருவை கலைக்க வேண்டும் என்று கூறுவார்கள். அவர்களிடம் அதற்கான வழிமுறைகளை கூறிவிடுவோம். இதுவரை நிறைய கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்று பரிசோதனை செய்துள்ளோம் என்று கூறினர்.

    கைதானவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று சாக்கமாளை சேலம் பெண்கள் சிறையிலும், மற்ற இருவரையும் தருமபுரி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டது.

    Next Story
    ×