search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மீது 5 பிரிவுகளில் வழக்கு: கைது செய்யக்கோரி தி.மு.க.வினர் போராட்டம்
    X

    சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் புகார் அளித்த காட்சி.

    கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மீது 5 பிரிவுகளில் வழக்கு: கைது செய்யக்கோரி தி.மு.க.வினர் போராட்டம்

    • முதலமைச்சர் குறித்து தரக்குறைவாக பேசிய அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • தி.மு.க.வை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் நள்ளிரவில் புகார் மனு அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் நேற்று அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவர் குறித்தும் குமரகுரு தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தி.மு.க.வினர் நள்ளிரவில் குமரகுருவை கைது செய்ய வலியுறுத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் உள்ளிட்ட 10 போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.

    சின்னசேலத்தில் ஒன்றிய குழுதலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் தி.மு.க.வை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் நள்ளிரவில் புகார் மனு அளித்தனர். போலீஸ் நிலையத்திற்கு வெளியே கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் குமரகுருவை கண்டித்தும் அவரை உடனடியாக கைது செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி போலீசார் குமரகுரு மீது 5 பிரிவுகளில் வழக்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    Next Story
    ×