search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    திருமங்கலத்தில் போலி வங்கி கிளைக்‌கு சீல்
    X

    திருமங்கலத்தில் போலி வங்கி கிளைக்‌கு சீல்

    • போலி கும்பல் சட்டவிரோதமாக கூட்டுறவு வங்கிகள் இயக்கி வருவதாக ரிசர்வ் வங்கி மாநில அரசுக்கு தகவல் அனுப்பியது.
    • ரிசர்வ் வங்கியின் அனுமயின்றி செயல்பட்ட இந்த வங்கிக்கு சீல் வைக்கப்பட்டது.

    திருமங்கலம்:

    தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தங்களது அனுமதியின்றி போலி கும்பல் சட்டவிரோதமாக கூட்டுறவு வங்கிகள் இயக்கி வருவதாக ரிசர்வ் வங்கி மாநில அரசுக்கு தகவல் அனுப்பியது.

    இதனை தொடர்ந்து சென்னை கிரைம்பிராஞ்ச் காவல் ஆணையா் சங்கர் ஜீவால் உத்தரவுபடி மாநிலம் முழுவதும் போலியாக இயங்கி வந்த வங்கி கிளைகளில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள மதுரை ரோட்டில் செயல் பட்டு வந்த ஊரக மற்றும் வேளாண்மை விவசாய கூட்டுறவு வங்கியில் சென்னை க்ரைம்பிரிவு போலீசார் நேற்று இரவு சோதனை நடத்தினர்.

    இந்த வங்கியில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் உதவி கொடுப்பதாக கூறி இயங்கியுள்ளது. போலீசாரின் சோதனையில் வங்கியில் இருந்த ஆவணங்கள், இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களின் ஆவணங்கள், முத்திரை, வங்கியின் பெயர் பலகை முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

    ரிசர்வ் வங்கியின் அனுமயின்றி செயல்பட்ட இந்த வங்கிக்கு சீல் வைக்கப்பட்டது. மிகவும் ரகசியமாக இந்த வங்கியில் சோதனை நடத்தியதால் பொதுமக்களுக்கு எதுவும் தெரியவரவில்லை. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் போலி வங்கி சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×