search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு- அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்
    X

    தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு- அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தல்

    • தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
    • மாணவர்கள் தேர்வு எழுதி முடியும் வரை அந்த பகுதியில் மின்சாரம் தடை இல்லாமல் வினியோகிக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பொதுத்தேர்வை எவ்வித குழப்பமும் இல்லாமல் முறையாக நடத்த அரசு தேர்வுத்துறை பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

    12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் (13-ந்தேதி) பொதுத்தேர்வு தொடங்குகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 14-ந்தேதி தொடங்குகிறது. இத்தேர்வை 16.25 லட்சம் பேர் எழுதுகிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 3,225 மையங்களில் தேர்வு எழுதுவதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் செய்துள்ளனர்.

    மாணவர்கள் ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் மேற்பார்வையாளர்கள், கண்காணிப்பாளர்கள் மாணவர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய வசதிகளை உறுதிப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட கலெக்டருடன் கலந்து பேசி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி மற்றும் குடிநீர் வசதி ஆகியவற்றை செய்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் தேர்வு எழுதி முடியும் வரை அந்த பகுதியில் மின்சாரம் தடை இல்லாமல் வினியோகிக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக உறுதிப்படுத்த வேண்டும். மேலும் கழிவறை, தூய்மை பணி, போதுமான அளவு பணியாளர்கள், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் போன்றவற்றை ரகசியமாக கொண்டு வர தேவையான அளவு வாகனங்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு ஆகியவற்றை விரிவாக மேற்கொள்ள வேண்டும்.

    மையங்களில் வினாத்தாளை பாதுகாப்பாக வைக்கவும், விடைத்தாள்களை திருத்தம் செய்ய பாதுகாப்பு மையங்களில் போலீஸ் கண்காணிப்பில் வைக்கவும் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×