என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கட்டணம் செலுத்தாததால் டோல்கேட்டில் நிறுத்தப்பட்ட அரசு பஸ்
மானாமதுரை அருகே கட்டணம் செலுத்தாததால் டோல்கேட்டில் நிறுத்தப்பட்ட அரசுபஸ்- பயணிகள் அவதி
- மானாமதுரை அருகே உள்ள திருப்பாசேத்தி டோல்கேட்டில் பரமக்குடியில் இருந்து மதுரைக்கு அரசுபஸ் வந்தது.
- பணம் இல்லை என்றால் டோல்கேட்டை எந்த வாகனமும் கடக்க முடியாது.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள திருப்பாசேத்தி டோல்கேட்டில் பரமக்குடியில் இருந்து மதுரைக்கு அரசுபஸ் வந்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். தற்போது நாடு முழுவதும் சுங்ககட்டணம் செலுத்த மின்னனு முறை பாஸ்டேக் மூலம் பணம் செலுத்தப்பட்டுவருகிறது.
இதில் பணம் இல்லை என்றால் டோல்கேட்டை எந்த வாகனமும் கடக்க முடியாது. பாஸ்டேக் கட்டணம் முடிந்த நிலையில்பரமக்குடியில் இருந்து வந்த அரசுபஸ் டோல்கேட்டில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டது. டோல்கேட் ஊழியர்கள் பணம் கட்டினால் தான் கேட்திறக்கும் என்று கூறிவிட்டனர்.
பாஸ்டேக் உள்ள வேறொரு பஸ்சுக்கு பதிலாக இந்த பஸ் விடப்பட்டுள்ளது. இதில் பாஸ்டேக் கட்டணம் முடிந்துள்ளது பற்றி தெரியாது. இதன் காரணமாக பயணிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.எனவே கேட்டை திறக்க வேண்டும் என்று பஸ்டிரைவர் தெரிவித்தார். ஆனாலும் டோல்கேட் ஊழியர்கள் பணம் செலுத்தினால் தான் செல்ல முடியும் எனகூறிவிட்டனர்.
இதையடுத்து பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர் டெப்போ மேலாளரிடம் பேசி போன்மூலம் டோல்கேட்கட்டணம் செலுத்திய பிறகு பஸ் புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
வழிதடங்களில் மாற்று பஸ்களை இயக்கும் போது பாஸ்டேக்குகள் காலாவதி ஆகிவிட்டதா? என்பதை சோதனை செய்யாமல் பஸ்களை ஓட்டிவரும் போது இதுபோன்ற நிலைஏற்படுகிறது. இதனால் பயணிகள் அவதிப்பட்டு பெரும்பாலும் தனியார் பஸ்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






