என் மலர்

  தமிழ்நாடு

  சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை- நீலகிரியில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தன
  X

  மஞ்சூரில் நடுரோட்டில் முறிந்து விழுந்த மரம்.


  சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை- நீலகிரியில் 100க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தன

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
  • கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

  குன்னூர்:

  நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மழைக்கு பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும், மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது.

  கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

  தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் கூடலூர் அருகே தேன்வயல், மண்வயல் ஆகிய பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 கிராமங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. தகவல் அறிந்த அதிகாரிகள் விரைந்து சென்று அங்கிருந்தவர்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.

  ஓவேலி அடுத்த சூண்டியில் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதேபோல் கூடலூர் ஹெல்த்கேம் காவலர் மற்றும் பி.எஸ்.என்.எல். அலுவலர் குடியிருப்புகளில் நின்ற மரங்களும் முறிந்து மின்கம்பம் மீது விழுந்தது. இதனால் மின்கம்பங்கள் சேதம் அடைந்தது.

  கீழ்நாடுகாணியில், சாலையில் நின்ற மரம் விழுந்தது. ஊட்டி-கூடலூர் சாலையில் கிளன்மார்கன், கல்லட்டி 4-வது கொண்டை ஊசி வளைவு, எமரால்டு சாலை, குந்தா, பெர்ன்ஹில், உலிக்கல் சாலையில் 2 இடங்கள், கிராம பகுதிகளில் பல இடங்கள் என மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

  அந்தந்த பகுதிகளில் விழுந்த மரங்களை தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வெட்டி அகற்றி வருகின்றனர்.

  சளிவயல் பகுதியில் சாலையின் குறுக்கே மின்கம்பம் சரிந்து விழுந்தது. இதுபோன்ற கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல கிராமங்கள் மின்வினியோகம் இன்றி இருளில் மூழ்கின. இதேபோல் ஏராளமான இடங்களில் சிறிய அளவிலான மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல் ஊட்டி, மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

  Next Story
  ×