search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் 11 நாட்களுக்கு பின் மீண்டும் இயக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
    X

    மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட மலை ரெயிலில் உற்சாகமாக பயணம் செய்த சுற்றுலா பயணிகள்.

    மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் 11 நாட்களுக்கு பின் மீண்டும் இயக்கம்: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

    • மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான ரெயில் தண்டவாளப்பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டது.
    • 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து மிகுந்த ஆர்வத்துடன் மலை ரெயிலில் பயணம் செய்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் பாதையோரத்தில் நின்றிருந்த மரங்கள் வேரோடு சரிந்து தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன.

    இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இருமார்க்கங்களிலும் மலை ரெயில் சேவை கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரையும், 9-ந்தேதி முதல் 18-ந்தேதிவரையும் ரத்து செய்யப்பட்டது.

    தொடர்ந்து மலைரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இதற்கான பணியில் 25-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான ரெயில் தண்டவாளப்பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இருமார்க்கங்களிலும் மலை ரெயில் சேவையை இன்று முதல் தொடங்குவது என ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் சேவை இன்று காலை தொடங்கியது. அப்போது 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து மிகுந்த ஆர்வத்துடன் மலை ரெயிலில் பயணம் செய்தனர்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயிலில் செல்லும்போது அந்த வழியில் உள்ள இயற்கை காட்சிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை அருகில் இருந்து பார்த்து ரசிக்க முடிவும். எனவே சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் மலைரெயிலில் பயணம் சென்றுவந்தனர்.

    நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்தநிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரெயில் சேவை 11 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    Next Story
    ×