என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆட்டோவை 2 கி.மீ. தொடர்ந்து சென்று கன்றுக்குட்டியிடம் பாசமழை பொழிந்த பசு
- கன்று குட்டியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்றார்.
- பசுமாடு குட்டியை ஏக்கத்துடன் பார்த்தவாறு அதனை தனது நாவால் வருடி பாச மழை பொழிந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் வளர்த்து வந்த பசுமாடு நாகை கடற்கரை சாலை அருகே கன்றுக்குட்டி ஈன்றது. பசுவை காணாது பல்வேறு இடங்களில் தேடிச்சென்ற கணேசன் பசுமாடு கன்று குட்டி ஈன்ற நிலையில் கடற்கரை சாலையில் இருப்பதை கண்டார்.
இதையடுத்து கன்று குட்டியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்றார். அப்போது தனது கன்றுக்குட்டியை உரிமையாளர் ஆட்டோவில் அழைத்துச் செல்வதை கண்ட பசுமாடு மா, மா... என கத்திக் கொண்டு பின்னாடியே சுமார் 2 கிலோ மீட்டர் துரத்தி சென்றது.
ஒரு கட்டத்தில் ஆட்டோவை வழிமறித்து நின்ற பசுமாடு குட்டியை ஏக்கத்துடன் பார்த்தவாறு அதனை தனது நாவால் வருடி பாச மழை பொழிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story






