என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆலங்குளம் அருகே மர்மகாய்ச்சலுக்கு 9 மாத பெண் குழந்தை பலி
    X

    ஆலங்குளம் அருகே மர்மகாய்ச்சலுக்கு 9 மாத பெண் குழந்தை பலி

    • ஆலங்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
    • அதிக அளவில் முகாம்கள் நடத்தி, காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள அழகாபுரி தெற்குதெருவை சேர்ந்தவர் லிங்கராஜ். இவருக்கு 9 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக குழந்தைக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த குழந்தைக்கு திடீரென காய்ச்சலுடன், மூச்சுத்திணறலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதைக்கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். ஆலங்குளம் பகுதியில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள் அதிகமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், எனவே அதிக அளவில் முகாம்கள் நடத்தி, காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

    Next Story
    ×