search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவில்களை புனரமைத்து, பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்- பி.கே.சேகர்பாபு அதிகாரிகளுக்கு அறிவுரை
    X

    கோவில்களை புனரமைத்து, பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்- பி.கே.சேகர்பாபு அதிகாரிகளுக்கு அறிவுரை

    • சிதிலமடைந்த நிலையில் உள்ள கோவில்களை புனரமைத்து, பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    • ஆய்வின்போது சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை, சென்னை மாவட்டக் குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    சென்னை:

    சென்னையில் சிதிலம் அடைந்த நிலையில் உள்ள கோவில்களை புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில் சென்னை மண்டல இணை ஆணையர்-1 ல் சேதமடைந்து இருக்கும் 25 கோவில்கள் பட்டியலிடப்பட்டு அதில் முதல் கட்டமாக 7 கோவில்களில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

    சூளை பகுதியில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்களான வெங்கடா ஜலபதி பரிபாலன சபா, லட்சுமி அம்மன் கோவில், தர்மராஜா கோவில், திரவுபதி அம்மன் கோவில், வேம்புலி அம்மன் கோவில், சுந்தரராஜ பெருமாள் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் ஆகிய கோவில்களில் குட முழுக்கு நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கோவிலின் மேற்கூரை மற்றும் சுவர்கள் ஆலமர விழுதுகளால் சிதிலடைந்தள்ளதாலும் மண்டல மற்றும் மாநில வல்லுநர் குழுக்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிதிலமடைந்த கோவில்களை புனரமைத்திட திட்ட மதிப்பீடுகள் தயாரித்து, 2024-25 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் சேர்த்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    மேலும், சூளை, லட்சுமி அம்மன் கோவில் சுற்றுச் சுவருக்கு உள்ளே பூங்கா நகர், சென்னமல்லீஸ்வரர் கோவிலின் அடிமனை தாரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அமைக்கப்பட்டு உள்ள கடைகள் மற்றும் இரும்பு பட்டறைகள், திரவுபதி அம்மன் தர்மராஜா கோவில் சுற்றுச்சுவருக்கு உட்புறம் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள 10 கடைகள், வேம்புலி அம்மன் கோவிலின் சுற்றுச்சுவருக்கு முன்புறம் கோவில் மற்றும் அதற்கு செல்லும் பாதையை மறைக்கும் வகையிலும் அமைக்கப்பட்டு உள்ள 2 கடைகள் ஆகியவற்றை சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். தர்மராஜா கோவிலுக்கு எதிரே சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின்படி சுவா தீனம் பெறப்பட்ட கந்தக்கோட்டம், முத்துகுமார சுவாமி கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்தினை புனரமைத்து மீண்டும் பயன் பாட்டிற்கு கொண்டுவரவும், சிதிலமடைந்த நிலையில் உள்ள கோவில்களை புனரமைத்து, பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை, சென்னை மாவட்டக் குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×