என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தென்காசியில் இன்று 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருமலைகோவில் சாலை வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபயிற்சி மேற்கொண்டார்.
- தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் நடை பயிற்சி மேற்கொண்டனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலையில் தென்காசி வந்தார். வந்த உடன் வழக்கம்போல் தனது பாணியில் காலையிலேயே நடைபயிற்சி மேற்கொண்டார்.
மேலகரம் அடுத்துள்ள மின்நகர் காசிமேஜர்புரம், இலஞ்சி திருமலைகோவில் சாலை வழியாக சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே.ஜெயபாலன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் நடை பயிற்சி மேற்கொண்டனர்.
Next Story






