search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நடக்கலாம் வாங்க... கோரிக்கை மனுக்களை தாங்க... தினமும் 2½ மணி நேரம் நடந்து வீடு வீடாக குறை கேட்கும் அமைச்சர்
    X

    நடக்கலாம் வாங்க... கோரிக்கை மனுக்களை தாங்க... தினமும் 2½ மணி நேரம் நடந்து வீடு வீடாக குறை கேட்கும் அமைச்சர்

    • தினமும் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை நடக்கிறார். அமைச்சர் அரசு துறை அதிகாரிகளையும் அழைத்து செல்கிறார்.
    • வீடு வீடாக என்னென்ன பிரச்சினை என்பதை கேட்டு மனுவாக எழுதி வாங்குகிறார்.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓட்டம் மற்றும் நடைபயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

    இப்போது தொகுதி மக்களை நேரில் சந்தித்து குறை கேட்டு வருகிறார்.

    அதையும் புதுமையான முறையில் நடக்கலாம் வாங்க... கோரிக்கை மனுக்களை தாங்க... என்ற வேண்டுகோளுடன் தினமும் வீடு வீடாக செல்கிறார்.

    அதாவது குறை கேட்பதுடன் உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.

    இதன்படி தினமும் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை நடக்கிறார். அவருடன் அரசு துறை அதிகாரிகளையும் அழைத்து செல்கிறார். வீடு வீடாக என்னென்ன பிரச்சினை என்பதை கேட்டு மனுவாக எழுதி வாங்குகிறார்.

    முந்தைய நாளே கட்சியினர் நாளை எந்த பகுதிகளில் அமைச்சர் நடந்து வருகிறார் என்பதை தெரிவித்து விடுகிறார்கள். இதனால் தெருக்களில் மக்களும் தயாராக இருக்கிறார்கள்.

    மொத்தம் 20 நாளில் 50 மணி நேரம் நடந்து சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் அனைத்து வீடுகளிலும் குறைகளை கேட்க முடிவு செய்துள்ளார்.

    3-வது நாளான இன்று ஏராளமானோர் மனு கொடுத்தனர். பெரும்பாலும் முதியோர், விதவை நிதி உதவி பற்றிய புகார்களே அதிகம் வருகிறது. அவைகளை உடனே நிறைவேற்றி கொடுக்க உத்தரவிட்டு வருகிறார்.

    இதுபோல் தெரு விளக்கு எரிவதில்லை, தண்ணீர் சரியாக வருவதில்லை போன்ற புகார்கள் தொடர்பாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்.

    அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி இந்த நடைபயணமும், குறை கேட்பும் நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×