search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருந்தும் விஷம் ஆகலாம்
    X

    மருந்தும் விஷம் ஆகலாம்

    • 90 சதவீத நோய்களை நம் உடலே சரிசெய்துவிடும்.
    • மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள்

    மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சாதாரணமாக காய்ச்சலுக்காக வழங்கப்படும் மாத்திரைகள் உடலில் ப்ராஸ்டாகேண்டின் என்ற திரவ வேதிப் பொருளை கட்டுப்படுத்தி வேலை செய்யும்.

    அந்த திரவ சுரப்பை பொறுத்துதான் காய்ச்சல், உடல்வலி, சோர்வு ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத்துவதுதான் பாராசிட்டமால் மாத்திரை. ஒருவரின் உடல் எடையை பொறுத்து மருந்தின் அளவு மாறுபடும்.

    அதிகமாக எடுத்துக் கொண்டால் விஷமாகி விடும். குறைவாக எடுத்துக் கொண்டால் வேலை செயாது. அதிக டோஸ் உள்ள மாத்திரையை எடுத்துக்கொண்டால் வயிறு புண்ணாகிவிடும். அடுத்ததாக கல்லீரலை பாதிக்கும்.

    உரிய அளவில் பாராசிட் டமால் மாத்திரையை கூட ஒரு நாளைக்கு அதிகபட்சம் 4 முறைதான் எடுத்துக் கொள்ள வேண்டும் தொடர்ச்சியாக சாப்பிட்டால் கல்லீரலை பாதிக்கும். இணை நோய்களுக்கு சாப்பிடும் மருந்துகளுடன் பாராசிட்டமாலை சரியான டோசில் கொடுக்காவிட்டால் மாத்திரைகளின் வேதியியல் மாறுபாட்டால் மருந்துகளின் வேகம் மாறும்.

    சாதாரணமாக ஜூரம், தலைவலி என்றாலே மாத்திரையை தேடக் கூடாது. உடலில் நீர் சத்து குறைவதால் காய்ச்சல் வரும். பயணம் செய்யும் போதோ, அதிகமாக தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போதோ நீர் சத்து குறைந்து உடல் சூடாகி, சோர்வு ஏற்பட்டு காய்ச்சல் போல்தான் இருக்கும்.

    இதற்கும் நாமே பாராசிட்டமால் எடுத்துக்கொண்டால் பாதிக்கும். பொதுவாக எல்லா மாத்திரைகளுமே கல்லீரல் மற்றும் கிட்னி வழியாக கிரகித்து மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறும். அப்படி இருக்கும்போது கல்லீரலுக்கும், கிட்னிக்கும் நாமே ஆபத்தை தேடி கொடுத்தது போல் ஆகிவிடும்.

    உடலில் கிருமித்தொற்று ஏற்பட்டாலே முதலில் காய்ச்சல் தான் வரும். எனவே காய்ச்சல் எதனால் வந்திருக்கிறது என்பதை அறிந்து மருந்து எடுத்துக் கொள்வது நல்லது.

    பொதுவாக காய்ச்சல், தலைவலி, உடல்சோர்வு இருந்தால் முதலில் நீர்சத்து நிறைந்த ஏதாவது உணவை எடுத்துக்கொண்டு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். இவ்வாறு செய்யும்போது உடல் புத்துணர்ச்சி பெறும். இதில் சரியாகாவிட்டால் பாராசிட்டமாலை தேடலாம்.

    90 சதவீத நோய்களை நம் உடலே சரிசெய்துவிடும். இல்லாத நோய்க்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளால் மிகப்பெரிய பின் விளைவுகள் வரும்.

    ஆன்டிபயாடிக் என்பதை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் கட்டாயம் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில் என்ன 'இன்பெக்சன்' என்பது தெரியாமல் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் ரத்தத்தில் கலந்து நோயை உருவாக்கிய வைரசை விழிப் படையச்செய்துவிடும். இதனால் அதிக சக்தியுடன் உருமாறி அதிக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    Next Story
    ×