என் மலர்

  தமிழ்நாடு

  எம்.சி.ரோடு சுரங்கப்பாதை சாலை சீரமைப்பு- வடசென்னையில் போக்குவரத்து மாற்றம்
  X

  எம்.சி.ரோடு சுரங்கப்பாதை சாலை சீரமைப்பு- வடசென்னையில் போக்குவரத்து மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு சுரங்கப்பாதையில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படுகிறது.
  • சிமெட்டெரி சாலை சந்திப்பு, ஸ்டான்லி சுரங்கப்பாதை, ஸ்டான்லி ரவுண்டானா வழியாக மேற்கண்ட பகுதிகளை அடையலாம்.

  சென்னை:

  வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோடு சுரங்கப்பாதையில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படுகிறது. இதையொட்டி அப்பகுதியில் இன்று முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

  இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  சென்னை மாநகராட்சி பாலங்கள் துறை சார்பாக எம்.சி. ரோடு சுரங்கப்பாதையில் பழுதடைந்த சாலை பகுதியை சீரமைக்கும் பணி இரு பகுதிகளாக நடைபெற உள்ளதால், சுரங்கப்பாதை பழுதடைந்த சாலை பகுதியை சீரமைக்கும் வரை சுரங்கப்பாதையில் செல்லும் போக்குவரத்து 07.12.2022 முதல் 05.01.2023 வரை கீழ்கண்டவாறு ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது.பிரகாசம் சாலை, பழைய சிறைச்சாலை சாலையில் இருந்து எம்.சி. ரோடு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ஸ்டான்லி ரவுண்டானா, இப்ராஹிம் சாலை, ராயபுரம் மேம்பாலம், எம்.எஸ்.கோவில் தெரு, சிமெட்டெரி சாலை வழியாக தண்டையார்பேட்டை மற்றும் எம்.சி. ரோடு செல்லலாம். தண்டையார்பேட்டை, எம்.சி. ரோடு மற்றும் ராயபுரம் பகுதியில் இருந்து ஸ்டான்லி மருத்துவமனை, பிராட்வே மற்றும் தங்கசாலை நோக்கிச் செல்லும் வாகனப் போக்குவரத்தில் எவ்வித மாற்றமின்றி எம்.சி.ரோடு சிமெட்டெரி சாலை சந்திப்பு, ஸ்டான்லி சுரங்கப்பாதை, ஸ்டான்லி ரவுண்டானா வழியாக மேற்கண்ட பகுதிகளை அடையலாம்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

  Next Story
  ×