என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மல்லாங்கிணறு தி.மு.க. கவுன்சிலர் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
- கடந்த சில நாட்களாக ஜேக்கப் செல்வகுமார் விரக்தியுடன் இருந்துள்ளார்.
- தி.மு.க. கவுன்சிலர் மகன் தற்கொலை செய்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு 10-வது வார்டு கவுன்சிலராக தி.மு.க.வை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் உள்ளார். இவரது மகன் ஜேக்கப் செல்வகுமார் (வயது 24).
பட்டப்படிப்பு முடித்துள்ள இவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை குடும்பத்தினர் கண்டித்தனர். இதனால் கடந்த சில நாட்களாக ஜேக்கப் செல்வகுமார் விரக்தியுடன் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனி அறைக்கு சென்ற ஜேக்கப் செல்வகுமார் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் விரைந்து வந்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தி.மு.க. கவுன்சிலர் மகன் தற்கொலை செய்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






