search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரை ரெயில் தீ விபத்து: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை ஆலோசனை
    X

    மதுரை ரெயில் தீ விபத்து: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நாளை ஆலோசனை

    • மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்துக்கு காரணமான சுற்றுலா நிறுவனம் மீது வழக்கு பதிவு.

    இந்திய ரெயில்வே மூலம் நாடு முழுவதிலும் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி புண்ணிய தலமான ராமேசுவரத்துக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா ரெயில்கள் இயக்கட்டு வருகின்றன.

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தமிழகத்தில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து கடந்த 17-ம் தேதி புறப்பட்ட சுற்றுலா ரெயில் இன்று காலை மதுரை வந்தது.

    மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதில் மூன்று பெண்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீ விபத்துக்கு காரணமான சுற்றுலா நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், மதுரை ரயில் தீ விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி தலைமையில் நாளை ஆலோசனை நடைபெற இருக்கிறது. நாளை காலை 9.30 மணிக்கு மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் கலந்து கொள்வோர், தங்களிடம் ஆவணங்கள் அல்லது வீடியோ காட்சிகள் ஏதேனும் இருந்தால் நேரில் வந்து, அவற்றை சம்ர்பிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது. விபத்து தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க விரும்பினால் நேரடியாக கூட்டத்தில் கலந்து கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மேலும் தெரிவித்தது.

    Next Story
    ×