search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 36 டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து
    X

    சேலம், தர்மபுரி மாவட்டங்களில் 36 டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து

    • தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • வாகன ஓட்டிகள் மத்திய, மாநில அரசு போக்குவரத்து விதிமுறைகளை கடை பிடித்து வாகனத்தை ஓட்ட வேண்டும்.

    சேலம்:

    தமிழகத்தில் வாகன விபத்துக்களை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் சாலை விதிகளை மீறுவது, அதிக பாரம் ஏற்றுவது, சரக்கு வாகனத்தில் பொது மக்களை ஏற்றிச்செல்வது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. மேலும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது.

    அதன்படி, கடந்த மாதம் மட்டும் சேலம், தர்மபுரியில் சாலை விபத்துகளில் உயிரிழப்பை ஏற்படுத்திய 36 டிரைவர்களின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து போக்கு வரத்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் சரகத்தில் நடப்பாண்டில் இதுவரை வாகன விபத்துக்களால் உயிரிழப்பை ஏற்படுத்திய 376 பேரின் டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த மாதம் மட்டும் சேலம், தருமபுரியில் 36 டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மத்திய, மாநில அரசு போக்குவரத்து விதிமுறைகளை கடை பிடித்து வாகனத்தை ஓட்ட வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×