search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி வாங்க குவிந்த கேரள வியாபாரிகள்
    X

    பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறி வாங்க குவிந்த கேரள வியாபாரிகள்

    • ஓணம் பண்டிகையின்போது டன் கணக்கில் காய்கறிகள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும்.
    • ஓணம் பண்டிகையொட்டி பச்சை காய்கறிகள் விலை கூடுதலாக விற்கப்பட்டன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட் மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கி வருகிறது.

    இந்த மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, மேலப்பாவூர், சுந்தரபாண்டியபுரம், சேர்ந்தமரம், குலையநேரி, சடையப்பபுரம், கட்டேறிபட்டி, குபேரபட்டணம், ராமச்சந்திரப்பட்டிணம், மேலமெஞ்ஞானபுரம், சுரண்டை,

    கீழக்கலங்கல், மேலக்கலங்கல், அச்சன்குன்றம், லட்சுமிபுரம், கருவந்தா, பரங்குன்றாபுரம், அதிசயபுரம், கலிங்கப்பட்டி, வீ.கே.புதூர், கல்லூத்து, இரட்டைகுளம், சாம்பவர்வடகரை, இலத்தூர், பெத்தநாடார்பட்டி, செல்லதாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம், ஆவுடையானூர், சாலைப்புதூர், அரியப்புரம், நாட்டார்ப்பட்டி, திப்பணம்பட்டி,

    கல்லூரணி, கொண்டலூர், திரவிய நகர், ஆழ்வார்குறிச்சி, பாப்பான்குளம், ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருவர். இங்கு விற்கப்படும் காய்கறிகள் அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும் கேரள மாநில வியாபாரிகள் ஆண்டு முழுவதும் இந்த மார்க்கெட்டிற்கு நேரடியாக வந்து காய்கறிகளை கொள்முதல் செய்வது வழக்கம். ஓணம் பண்டிகையின்போது டன் கணக்கில் காய்கறிகள் கேரளாவிற்கு ஏற்றுமதியாகும்.

    கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டம் சூடுபிடித்துள்ளது. நாளை திருவோணம் நட்சத்திரத்தன்று ஓணம் திருவிழா விமர்சையாக நடக்கிறது. இதனையொட்டி பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் கேரள வியாபாரிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

    மேலும் கடந்த 3 நாட்களாக கூடுதல் காய்கறிகள் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இங்கிருந்து கர்நாடகா, மும்பையில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளும் அதிகளவில் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    மேலும் சாம்பார் காய்கறிகளான கேரட், பீன்ஸ், வெள்ளரி, உருளை, பல்லாரி, சாம்பார் வெள்ளரி போன்றவை அதிகளவில் கொள்முல் செய்யப்பட்டு கேரள நகரங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் இருந்து உருளை, இஞ்சி, பீன்ஸ் வரத்து குறைவாக இருந்தாலும் கேரளாவிற்கு தேவைக்கேற்ப அவற்றை வியாபாரிகள் அனுப்பி வருகின்றனர்.

    ஓணம் பண்டிகையொட்டி பச்சை காய்கறிகள் விலை கூடுதலாக விற்கப்பட்டன. கத்திரிக்காய் ரூ.10 முதல் ரூ.18-க்கும், வெண்டை கிலோ ஒன்றுக்கு ரூ.30, அவரை-ரூ.15, புடலைங்காய்-ரூ.35, சீனி அவரை-ரூ.33, காராமணி-ரூ.37, பாகற்காய்-ரூ.22, சுரைக்காய்-ரூ.20, பூசணிக்காய்-ரூ.8, தடியங்காய்-ரூ.6, சாம்பார் வெள்ளரி-ரூ.4, சுனாமி-ரூ.13, தக்காளி-ரூ.23, மிளகாய்-ரூ.30, சின்ன வெங்காயம்-ரூ.45, பல்லாரி கிலோ ரூ.20 முதல் ரூ.32 வரையிலும், மாங்காய் ரூ.50 முதல் ரூ.60 வரையிலும் விற்பனையானது.

    Next Story
    ×