என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1500 கனஅடியாக சரிவு
- காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.
- தொடர்ந்து 1000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்:
கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழக-கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் சில தினங்களாக கனமழை பெய்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்றம்பாளையம், ஓசூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மலை குன்றுகளில் பெய்த மழையின் காரணமாகவும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகும் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்து வர தொடங்கியது.
இந்த நிலையில் ஒகேனக்கல்லில் நேற்று 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், இன்று காலை சற்று சரிந்து 1500 கனஅடியாக நீர்வரத்து குறைந்து வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல்லில் தொடர்ந்து 1000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து வருவதால், மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.






