என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
    X

    4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

    சென்னை:

    தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

    அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×