என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஊட்டியில் கொட்டும் கடும் உறைபனி
    X

    ஊட்டியில் கொட்டும் கடும் உறைபனி

    • மழை குறைந்து விட்டதால் உறைபனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.
    • உறைபனியால் புல்வெளிகள் அனைத்து வெள்ளை போர்வை போர்த்தியது போன்று காணப்படுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது, பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.

    இந்த காலநிலையை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தொடர் மழையால் உறைபனி ஒரளவு குறைந்து காணப்பட்டது. தற்போது மழை குறைந்து விட்டதால் உறைபனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.

    உறைபனியால் புல்வெளிகள் அனைத்து வெள்ளை போர்வை போர்த்தியது போன்று காணப்படுகிறது. கார்கள், புல்தரைகள், விவசாய நிலங்கள் உள்ளிட்டவற்றிலும் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    ஊட்டியில் அதிகபட்சமாக 22.7 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 3.5 டிகிரி செல்சியசும் பதிவாகி உள்ளது.

    உறைபனியுடன் கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். குளிரில் இருந்து காத்து கொள்ள தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

    குளிரால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என அனைவரும் சுவர்ட்டர் அணிந்து கொண்டு சென்றனர்.

    Next Story
    ×