என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கூட்டுறவு சார் பதிவாளர்கள்-துணைப் பதிவாளர்களாக நியமனம்: அரசு உத்தரவு
    X

    தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கூட்டுறவு சார் பதிவாளர்கள்-துணைப் பதிவாளர்களாக நியமனம்: அரசு உத்தரவு

    • கூட்டுறவு துறை சார் பதிவாளர்களை துணைப் பதிவாளர்களாக பணி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
    • கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்களாக பணியமர்த்தம் செய்ய ஆணையிடப்படுகிறது.

    சென்னை:

    கூட்டுறவு துறை சார் பதிவாளர்களை துணைப் பதிவாளர்களாக பணி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    இதுகுறித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் 15 கூட்டுறவு சார் பதிவாளர்களை கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்களாக பணியமர்த்தம் செய்ய ஆணையிடப்படுகிறது.

    1. திருநாவுக்கரசு-திருச்சி பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர்.

    2. சுரேஷ்-கள்ளக்குறிச்சி பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர்.

    3. பழனி-லால்குடி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்.

    4. சிவமணி-ராணிப்பேட்டை பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர்.

    5. மணிமேகலை-திருக்கோவிலூர் கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குனர்-துணைப் பதிவாளர்.

    6. வசந்தி-திண்டுக்கல் கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குனர்-துணைப் பதிவாளர்.

    7. சற்குணன்-செங்கல்பட்டு பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர்.

    8. இந்திரா-திருசெங்கோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்.

    9. ருஷ்யாராணி-சென்னை பூங்கா நகர் பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர்.

    10. மீர் ஹசன் முசபர் இம்தியாஸ்-நீலகிரி துணைப் பதிவாளர்.

    11. விஜயலட்சுமி-ஜார்ஜ் டவுன் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், துணைப் பதிவாளர்.

    12. சவுந்திரராஜன்-கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் கோபி செட்டிபாளையம் சரகம்.

    13. சக்தி முத்துக்குமார்-வடசென்னை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மேலாண்மை இயக்குனர், துணைப் பதிவாளர்.

    14. அப்துல் மஜீத்-தஞ்சை கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்.

    15. ப.அண்ணாமலை-மயிலாடுதுறை பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர்.

    Next Story
    ×