என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆவடி பகுதியில் 100 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
    X

    ஆவடி பகுதியில் 100 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

    • உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் மோரை உள்ளிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
    • ஓட்டல்கள், பேக்கரி, மளிகைகடை என சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

    திருநின்றவூர்:

    ஆவடி அடுத்த மோரை, ஜே.ஜே. நகர், புதிய கன்னியம்மன் நகர், உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் தரமற்ற பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் மோரை உள்ளிட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    ஓட்டல்கள், பேக்கரி, மளிகைகடை என சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்தார்.

    Next Story
    ×