search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு- 23 குழுக்கள் அமைத்து துரைமுருகன் அறிவிப்பு
    X

    தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு- 23 குழுக்கள் அமைத்து துரைமுருகன் அறிவிப்பு

    • வரவேற்பு குழு செயலாளராக மாநில துணை செயலாளர் வக்கீல் தூத்துக்குடி ஜோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • 23 குழுக்களிலும் தனித்தனியாக ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு அடுத்த மாதம் 17-ந்தேதி சேலத்தில் நடைபெறுகிறது. இதற்கான வரவேற்பு குழு செயலாளராக மாநில துணை செயலாளர் வக்கீல் தூத்துக்குடி ஜோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் 23 குழுக்களும் மாநாட்டுக்காக அமைக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இளைஞர் அணி மாநாட்டு பணிகளை மேற் கொள்வதற்காக கீழ்க்கண்ட குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இந்த குழுக்கள் அதற்குரிய பணிகளை மேற் கொள்வதற்கு கழக நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    வரவேற்பு குழு செயலாளராக துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளர்களாக வீரபாண்டி பிரபு, மணிகண்டன், அருண் பிரசன்னா, கேபிள் சரவணன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பந்தல் குழு செயலாளராக மாநில துணைச் செயலாளர் ரகுபதி என்கிற இன்பா ரகு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழுவில் 4 ஒருங்கிணைப்பாளர்கள், 7 குழு உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    பொது இருக்கை வசதிகள், கண்காணிப்பு குழு செயலாளராக மாநில துணைச் செயலாளர் இளையராஜா, வாகன கட்டுப்பாட்டு குழு செயலாளராக அப்துல் மாலிக், நிதிக்குழு செயலாளராக பிரகாஷ், பேச்சாளர் ஒருங்கிணைப்பு குழு செயலாளராக பிரபு ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேடை நிர்வாக குழு செயலாளராக துணை செயலாளர் சீனிவாசன், உணவு கூடங்கள், கடைகள் கண்காணிப்பு குழு செயலாளராக ஜி.பி.ராஜா, தீர்மானக்குழு செயலாளராக ஆனந்த் குமார், கழக முன்னணியினர் இருக்கை வசதி அமைப்பு குழு செயலாளராக திருவண்ணாலை தெற்கு மாவட்ட அமைப்பாளர் சி.என். அண்ணாதுரை எம்.பி. இந்தியா கூட்டணி தொடர்பு குழு செயலாளராக விருதுநகர் தெற்கு மாவட்ட அமைப்பாளரான தனுஷ் எம்.குமார் எம்.பி. ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    பொது பாதுகாப்பு குழு தலைவராக ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., விளம்பர குழு செயலாளராக எபினேசர் எம்.எல்.ஏ., பத்திரிகை, ஊடக ஒருங்கிணைப்பு குழு செயலாளராக ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா எம்.எல்.ஏ., மருத்துவ குழு செயலாளராக நெல்லை மாநகர மேயர் பி.எம்.சரவணன், காணொலி தயாரிப்பு குழு செயலாளராக திருவரங்கம் நா.ஆனந்த், சட்ட ஆலோசனை குழு செயலாளராக விழுப்புரம் வடக்கு மாவட்ட அமைப்பாளர் ஆனந்த், உபசரிப்பு குழு செயாளராக கடலூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் கார்த்திகேயன், மலர் குழு செயலாளராக திருப்பூர் தெற்கு மாவட்ட அமைப்பா ளர் ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சமூக வலை தள குழு செயலாளராக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அமைப்பாளர் சண்முகம், தூய்மை பணி குழு அமைப்பாளராக தெய்வ இளைய ராஜா, அலுவலக பொறுப்பு குழு செயலாளராக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் கணேசன், சி.சி.டி.வி. கண்காணிப்பு குழு செயலாளராக சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் நாகனி பா.செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த 23 குழுக்களிலும் தனித்தனியாக ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    Next Story
    ×