search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொது இடத்தில் பாம்புகளை நடனமாட வைத்து பணம் வசூல் செய்த நபருக்கு முன்ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுப்பு
    X

    பொது இடத்தில் பாம்புகளை நடனமாட வைத்து பணம் வசூல் செய்த நபருக்கு முன்ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுப்பு

    • வன பாதுகாப்பு சட்டத்தின்படி இவர்களின் நடவடிக்கை சட்ட விரோதமானது.
    • சாரைப்பாம்பு உள்ளிட்ட மேலும் சில வகையான 15 பாம்புகள் அவர்களிடம் இருக்கின்றன.

    மதுரை:

    மதுரை கீழக்குயில்குடி பகுதியில் கடந்த 4-ந் தேதி பொது இடத்தில் 2 பேர் பாம்புகளை நடனமாட செய்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2-வது நபரான பாபு, தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் பழனிசாமி ஆஜராகி, மனுதார் உள்பட 2 பேர் சாரைப்பாம்புகளை பொது இடத்தில் நடனமாட செய்து, பணம் வசூலித்துள்ளனர்.

    வன பாதுகாப்பு சட்டத்தின்படி இவர்களின் நடவடிக்கை சட்ட விரோதமானது. இந்த சம்பவம் குறித்த வழக்கில், முதல் குற்றவாளி ஏற்கனவே கைது செய்யப்பட்டு 2 பாம்புகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாரைப்பாம்பு உள்ளிட்ட மேலும் சில வகையான 15 பாம்புகள் அவர்களிடம் இருக்கின்றன. அவை இன்னும் மீட்கப்படவில்லை.

    மேலும் அவர்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, மனு தாரருக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என்று வாதாடினார்.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி தமிழரசி, மனுதாரரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

    Next Story
    ×