என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொம்மை காரில் அழைத்து வந்து தடபுடல் விருந்துடன் செல்ல நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த தம்பதிகள்
    X

    பொம்மை காரில் அழைத்து வந்து தடபுடல் விருந்துடன் செல்ல நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த தம்பதிகள்

    • வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மீது அதன் உரிமையாளர்கள் எப்போதுமே பாசமாக இருப்பது வழக்கம்.
    • நிஜ திருமணத்தில் நடப்பதை போல நாய் ஜோடிகள் பொம்மை காரில் மேளதாளம் முழுங்க அழைத்து வரப்பட்டது.

    வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மீது அதன் உரிமையாளர்கள் எப்போதுமே பாசமாக இருப்பது வழக்கம்.

    இந்நிலையில், நாய்களை வளர்த்து வரும் 2 தம்பதிகள் அவற்றிற்கு தடபுடல் விருந்துடன் கோலாகலமாக திருமணம் செய்து வைத்த காட்சிகள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

    ரியோ, ரியா என பெயரிடப்பட்ட இந்த இரு நாய்களின் உரிமையாளர்களும் அவர்களின் உறவினர்களை அழைத்து தடபுடல் விருந்துடன் இந்த நிகழ்ச்சியை நடத்தினர்.

    நிஜ திருமணத்தில் நடப்பதை போல நாய் ஜோடிகள் பொம்மை காரில் மேளதாளம் முழுங்க அழைத்து வரப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் நாய் ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. விழாவுக்கு வந்த அனைவருக்கும் தடபுடல் விருந்தும் பரிமாறப்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் செல்போனில் படம் எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

    தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என விமர்சித்து உள்ளனர்.

    சிலர் என் வீட்டில் இருக்கும் பூனைக்கும் இதுபோல திருமணம் செய்து வைக்க போகிறேன் என கருத்து பதிவிட்டு உள்ளனர்.

    Next Story
    ×