என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்
- மாமல்லபுரம் முதல் முகையூர் வரையான 31 கி.மீ., தூரத்திற்கு 675 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- சாலையோரம் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணிகளும், மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகளும் விரைவாக நடந்து வருகிறது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையான கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை 1,270 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இதில் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில், 1.5 கி.மீ.,க்கு அமைய உள்ள மேம்பால பணிகளின் தூண்கள் மற்றும் தரைப்பாலம் அமைக்க அதன் அஸ்திவார பணிகளை பருவமழை தொடங்கும் முன்னர் முடிப்பதற்காக ஆழமான பள்ளம் தோண்டப்பட்டு வேலைகள் தீவிரமாக நடைபெறுகிறது.
முதல் கட்டமாக மாமல்லபுரம் முதல் முகையூர் வரையான 31 கி.மீ., தூரத்திற்கு 675 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது., இதையடுத்து அப்பகுதி சாலையோரம் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணிகளும், மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகளும் விரைவாக நடந்து வருகிறது.
Next Story






