search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை ஆவினில் பால் பாக்கெட்டுகள் திருட்டில் ஊழியர்களுக்கு தொடர்பு?- கைதான 4 பேரிடம் போலீசார் விசாரணை
    X

    நெல்லை ஆவினில் பால் பாக்கெட்டுகள் திருட்டில் ஊழியர்களுக்கு தொடர்பு?- கைதான 4 பேரிடம் போலீசார் விசாரணை

    • நெல்லை ரெட்டியார்பட்டியில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
    • வாகனங்களில் கூடுதலாக பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வந்தது.

    நெல்லை:

    நெல்லை ரெட்டியார்பட்டியில் ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தினந்தோறும் 75 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆவின் நிர்வாகத்தில் இருந்து தினமும் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பால் பாக்கெட்டுகள் எடுத்து செல்லப்படும் நிலையில், அந்த வாகனங்களில் கூடுதலாக பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வந்தது.

    இதையடுத்து நேற்று இரவு ஆவின் கூடுதல் துணை மேலாளர் ஜோஸ்பினா மற்றும் சாந்தி ஆகியோர் தெற்கு பஜார் பகுதிக்கு பால் கொண்டு செல்லும் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் கணக்கில் வராத 209 லிட்டர் பால் பாக்கெட்டுகள் கூடுதலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக ஆவின் நிர்வாகம் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் சீனிவாசன் ஆவின் நிர்வாகத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடுமேன் மன்சூர், கிளார்க் ஆசை தம்பி, பால்முகவர் ரமேஷ், உதவியாளர் அருண் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம், எத்தனை நாட்கள் இந்த மாதிரி பால் திருட்டு நடைபெற்றது என்பது குறித்தும், ஆவின் ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×