search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேனியில் பேய் வீடுகளுக்கு கமிஷன் இலவசம் போஸ்டரால் பரபரப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தேனியில் பேய் வீடுகளுக்கு கமிஷன் இலவசம் போஸ்டரால் பரபரப்பு

    • சமூகஆர்வலர்கள் தேனி போலீசில் புகார் அளித்தனர்.
    • விஷம் குடித்தும் தற்கொலை செய்வோர்களின் வீடுகளுக்கு யாரும் குடிவருவதில்லை.

    தேனி:

    தேனியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர் ஜெய்முருகேஷ்(52). இவர் வீடு வாடகைக்கு, ஒத்தி, வீட்டடி மனைகள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக தேனியில் பல்வேறு பகுதிகளில் வாடகைக்கு வீடு, ஒத்திக்கு வீடு, ஒரு மணிநேரத்தில் அமைத்து தரப்படும். இதற்கு சர்வீஸ் கட்டணம் கிடையாது. மேலும் பேய்வீடுகளுக்கு கட்டணம் முற்றிலும் இலவசம் என பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சமூகஆர்வலர்கள் தேனி போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் போஸ்டர்களை அகற்ற உத்தரவிட்டனர். அதன்படி ஜெய்முருகேஷ் போஸ்டர்களை கிழித்து அகற்றினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

    தூக்குபோட்டும், விஷம் குடித்தும் தற்கொலை செய்வோர்களின் வீடுகளுக்கு யாரும் குடிவருவதில்லை. இதனால் எங்களை போன்றவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுமக்களை கவர இதுபோன்று வித்தியாசமான முறையில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினேன் என்றார்.

    Next Story
    ×