search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா. ஜனதாவின் குதிரை பேரத்தால் ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டது- திருச்சி சிவா எம்.பி. பேட்டி
    X

    திருச்சி சிவா


    பா. ஜனதாவின் குதிரை பேரத்தால் ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டது- திருச்சி சிவா எம்.பி. பேட்டி

    • பிரதமர் மோடியின் பேச்சும், செயலும் வேறு வேறாக உள்ளது.
    • கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே.கோவிந்தராஜன் தலைமையில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது.

    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே.கோவிந்தராஜன் தலைமையில்

    திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெற்றது. இதில் திராவிட கொள்கை பற்றாளர் நாஞ்சில் சம்பத், தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம். பி. மற்றும் இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் பங்கேற்று தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுக்கு திராவிடம் குறித்து எடுத்துரைத்தனர். அமைப்பாளர் உதயசூரியன் துணை அமைப்பாளர்கள் கே.வி.லோகேஷ், ஜெ.மோகன்பாபு, கேவி.ஆனந்குமார், முரளிதரன், தில்லை குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஏவி.ராமமூர்த்தி, தன்னலம் கிருஷ்ணமூர்த்தி, மணிபாலன், பாச.குணசேகரன், கன்னிகை ஸ்டாலின், அபிராமி குமரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் திருச்சி சிவா எம். பி. நிருபர்களிடம் கூறுகையில், "பா.ஜ.க.வின் குதிரை பேரம் காரணமாக பல மாநிலங்களில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது. மக்கள் சரியான நேரத்தில் தீர்ப்பளித்து ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். பா. ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் அரசியல் சட்டத்தின் மாண்புகள் மங்கி வருகிறது. அரசியல் சட்டத்தின் மாண்பை காப்பாற்ற ஒருவர் வர வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி தரப்பில் யஸ்வந்த் சின்கா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யஸ்வந்த் சின்கா வெற்றி பெற்று எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிப்பார். நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்வரும் 2024 பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும். பிரதமர் மோடியின் பேச்சும், செயலும் வேறு வேறாக உள்ளது. நாடாளுமன்றத்தில் இருப்பார் ஆனால் நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×