search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை பணியால் மாநகர பஸ்கள் நிறுத்தப்பட்டதால் 1 லட்சம் மக்கள் அவதி
    X

    குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை பணியால் மாநகர பஸ்கள் நிறுத்தப்பட்டதால் 1 லட்சம் மக்கள் அவதி

    • சென்னை குரோம்பேட்டை ராதாநகரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • ராதாநகர் சுரங்கப்பாதையால் மாநகர பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பல குடியிருப்பு பகுதிகள் தீவுபோல துண்டிக்கப்பட்டுள்ளது.

    சென்னை குரோம்பேட்டை ராதாநகரில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இதையடுத்து இந்த வழியாக சென்ற மாநகர போக்குவரத்து கழக பஸ் நிறுத்தப்பட்டது.

    இதன் காரணமாக தாம்பரம் மாநகராட்சியின் 2 மற்றும் 3 ஆகிய மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இங்கு ராதாநகர், கணபதிபுரம், பாரதிபுரம், ஜமீன் ராயப்பேட்டை, செந்தில்நகர், சூர்யா அவென்யூ, போஸ்டல் காலனி, ஏ.ஜி.எஸ். காலனி, நெமிலிச்சேரி, மாருதி அவென்யூ ஆகிய பகுதிகள் உள்ளன.

    ராதாநகர்-அருள்முருகன் நந்தவனம் நகர் இடையே சுமார் 3 கிலோ மீட்டருக்குள் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இங்கு வசிக்கும் அனைவருமே ஆட்டோக்களையே நம்பி உள்ளனர்.

    இதனால் போக்குவரத்துக்கு அதிக தொகை செலவிட வேண்டிய நிலையில் உள்ளனர். குறிப்பாக நெமிலிச்சேரியில் இருந்து குரோம்பேட்டை ராஜாநகர் லெவல் கிராசிங்கை அடைய ஆட்டோ கட்டணம் ரூ.200 வரை வசூலிக்கப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    மேலும் குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை மிகவும் இலகுவாக இருப்பதால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அந்த பகுதி களில் வசிக்கும் பொது மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    ராதாநகர் சுரங்கப்பாதையால் மாநகர பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பல குடியிருப்பு பகுதிகள் தீவுபோல துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு மினி பஸ் மட்டும் மேடவாக்கம்-குரோம்பேட்டை இடையே நெமிலிச்சேரி வழியாக இயக்கப்படுகிறது.

    ஆனால் அது எப்போதாவது மட்டுமே வருகிறது. அந்த பஸ் சுற்றுப்பாதையில் செல்வதால் அதிக நேரமாகிறது. ஆட்டோக்கள் மிகவும் அதிகமாக கட்டணம் வசூலிக்கின்றன. எனவே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடித்து மாநகர பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×