என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி ஆய்வு
    X

    சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அதிகாரி ஆய்வு

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரும் வழித்தடம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.
    • ஓட்டு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் வந்து செல்ல கம்புகளால் சாரம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

    ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும்.

    இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறை மற்றும் அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரும் வழித்தடம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.

    மேலும் ஓட்டு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களின் முகவர்கள் வந்து செல்ல கம்புகளால் சாரம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

    Next Story
    ×