என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கால்வாயில் மூழ்கிய மாணவியை காப்பாற்றிய அலங்காநல்லூர் ராணுவ வீரரை கவுரவித்த தலைமை தளபதி
    X

    ராணுவ வீரர் நவநீத கிருஷ்ணனை பாராட்டி தலைமை தளபதி மனோஜ் பாண்டே விருது வழங்கினார்.

    கால்வாயில் மூழ்கிய மாணவியை காப்பாற்றிய அலங்காநல்லூர் ராணுவ வீரரை கவுரவித்த தலைமை தளபதி

    • மாணவியின் உயிரை காப்பாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.
    • ராணுவ வீரர் நவநீத கிருஷ்ணனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது23). பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 16-ந்தேதி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள பக்ரா கால்வாய் கரையில் நடந்து சென்ற 19 வயது கல்லூரி மாணவி எதிர்பாராத விதமாக கால்வாயில் தவறி விழுந்து வேகமாக ஓடிய தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

    அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணன் இதைக்கண்டு உடனடியாக கால்வாயில் குதித்து தன்னுயிரை பற்றி சிந்திக்காமல் உயிருக்கு போராடிய மாணவியை பாய்ந்தோடிய தண்ணீரில் இருந்து காப்பாற்றி கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்.

    ராணுவ வீரரின் இந்த துணிச்சல் மிகு செயல் பற்றி தகவலறிந்த ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே ராணுவ வீரர் நவநீத கிருஷ்ணனை நேரில் அழைத்து பாராட்டி விருது வழங்கி கவுரவித்தார்.

    மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவியின் உயிரை காப்பாற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனுக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார். ராணுவ வீரர் நவநீத கிருஷ்ணனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×