search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மெமோரியல்ஹால் அருகே பொதுமக்கள் சாலையை கடக்க எஸ்கலேட்டருடன் சுரங்கப் பாதை
    X

    சென்னை மெமோரியல்ஹால் அருகே பொதுமக்கள் சாலையை கடக்க எஸ்கலேட்டருடன் சுரங்கப் பாதை

    • சென்னை மெமோரியல் ஹால் சிக்னல் அருகில் தினமும் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது.
    • பொதுமக்கள் நீண்டநேரம் இந்த சிக்னல் பகுதியில் காத்திருப்பது குறையும்.

    சென்னை:

    சென்னை மெமோரியல் ஹால் அருகே பொதுமக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல வசதியாக "எஸ்கலேட்டருடன்'' சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மெமோரியல் ஹால் சிக்னல் அருகில் தினமும் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் இந்த சிக்னல் பகுதியில் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவலநிலை உள்ளது. இதனால் பொது மக்கள் சாலையை எளிதில் கடந்து செல்ல அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த சாலையை பொது மக்கள் எளிதில் கடந்து செல்வ தற்காக பூமிக்கடியில் 'எஸ்கலேட்டர்' வசதியுடன் நவீன சுரங்க நடைபாதை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டது.

    இந்த நவீன சுரங்க நடைபாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன. பொது மக்கள் இந்த சுரங்க நடைபாதையில் செல்ல படிக்கட்டுகள் மற்றும் 'எஸ்கலேட்டர்' வசதிகள், காற்றோட்ட வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக பொதுமக்கள் எளிதில் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு செல்லலாம்.

    இதற்காக சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் அருகே இருபுறமும் 2 'எஸ்கலேட்டர்கள்' மற்றும் நவீன கிரானைட் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் நீண்டநேரம் இந்த சிக்னல் பகுதியில் காத்திருப்பது குறையும். பொதுமக்கள் பயன் பாட்டுக்கு இந்த சுரங்க நடைபாதை விரைவில் திறக்கப்பட உள்ளது.

    Next Story
    ×