என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடு உரிமையாளர்களுக்கு அபராதம்
- மாடுகளை பொது வெளியில் திரிய விடக்கூடாது.
- மாடுகளை பொது வெளியில் விடும் பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின்படி அபராதம்.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் 13-ந் தேதி வரை மொத்தம் 302 மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,550 வீதம் ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது.
மாடுகளை பொது வெளியில் திரிய விடக்கூடாது, சொந்த இடங்களிலேயே கட்டி வைக்க வேண்டும், மீறி மாடுகளை பொது வெளியில் விடும் பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தின்படி அபராதம் விதிக்கப்பட்டு காவல் துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
Next Story






